சென்னை, மே 23 – ஜெயலலிதா உட்பட 29 பேர் இன்று காலை பதவியேற்க உள்ளனர். புதிய அமைச்சரவையில் பெரும்பாலும், முன்னர் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களுக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டு, முன்பு அவர்கள் வசமிருந்த துறைகளே ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த அமைச்சர்கள் பட்டியலில் ஆனந்தன் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள செந்தூர் பாண்டியன் ஆகியோர் இடம்பெறவில்லை. புதிய அமைச்சர்கள் பட்டியலையும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளையும் காண்போம்.
அமைச்சர்கள் பட்டியல்:
ஜெயலலிதா – பொது நிர்வாகம், காவல்துறை.
ஓ. பன்னீர் செல்வம் – நிதித்துறை, பொதுப்பணித்துறை.
நத்தம் விஸ்வநாதன் – மின்துறை.
வைத்திலிங்கம் – வீட்டுவசதி, ஊரக வளர்ச்சி.
எடப்பாடி பழனிச்சாமி – நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள், வனத்துறை.
ப. மோகன் – ஊரக வளர்ச்சித்துறை.
வளர்மதி – சமூக நலத்துறை.
கோகுல இந்திரா – கைத்தறித்துறை.
வளர்மதி- சமூக நலத்துறை மற்றும் சத்துணவு.
பழனியப்பன் – உயர்கல்வித்துறை.
செல்லூர் ராஜூ – கூட்டுறவுத்துறை.
காமராஜ் – உணவு, இந்துசமய அறநிலையத்துறை.
தங்கமணி – தொழில்துறை.
செந்தில் பாலாஜி – போக்குவரத்துத்துறை.
எம்சி சம்பத் – பத்திரப்பதிவுகள் துறை.
வேலுமணி – உள்ளாட்சி நிர்வாகம், ஊரக மேம்பாடு, சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைகள் துறை.
டிகேஎம் சின்னையா – கால்நடைத்துறை.
கோகுல இந்திரா – கைத்தறிகள் துறை.
சுந்தர ராஜூ- விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்.
சண்முகநாதன்- சுற்றுலாத்துறை.
என் சுப்பிரமணியன்- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்.
ஜெயபால் – மீன்வளத்துறை.
முக்கூர் என் சுப்பிரமணியன் – தகவல் தொழில்நுட்பம்.
ஆர்பி உதயகுமார் – வருவாய்துறை.
ராஜேந்திர பாலாஜி- தகவல் மற்றும் சிறப்புத்திட்டங்கள்.
பிவி ரமணா – பால்வளத்துறை.
கேசி வீரமணி- பள்ளிக்கல்வித்துறை.
தோப்பு வெங்கடாச்சலம்- சுற்றுச்சூழல்துறை.
பூனாட்சி- காதி மற்றும் கிராம தொழில்துறை.
அப்துல் ரஹிம் – பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலன்.
விஜயபாஸ்கர் – சுகாதாரத்துறை.