Home உலகம் 5 மாத சிறைக்குப்பின் கொரியன் ஏர் முன்னாள் நிர்வாகி விடுவிப்பு!

5 மாத சிறைக்குப்பின் கொரியன் ஏர் முன்னாள் நிர்வாகி விடுவிப்பு!

508
0
SHARE
Ad

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????சியோல், மே 23 – கொரியன் ஏர் விமான நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி ஹீதர் சோ 5 மாத சிறை வாசத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.

முன்னதாக விமானத்தில் சென்ற போது மகாடாமியா பருப்பு வகைகளை தனக்கு பரிமாறிய விதம் குறித்து அதிருப்தி அடைந்ததால், விமான ஊழியர்களிடம் தாறுமாறாக நடந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

கொரியன் ஏர் விமான நிறுவனத்தின் தலைவரது மகளான ஹீதர் சோவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதும் அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி நியூயார்க் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட கொரியன் ஏர் விமானத்தில் அவருக்கு பருப்பு வகைகள் வழங்கப்பட்டன. இது குறித்து அதிருப்தி அடைந்த அவர், விமான பணியாளர்களுக்கு தலைமையேற்றிருந்த ஊழியரை உடனடியாக விமானத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என ஆவேசமடைந்தார். இதையடுத்து அந்த விமானத்தை வலுக்கட்டாயமாக மீண்டும் தரையிறங்க வைத்தார்.

இது தொடர்பாக அவர் விமான ஊழியர்களிடம் தாறுமாறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்த தகவல் பரவியதும் பல்வேறு தரப்பினரும் ஹீதர் சோவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் அவரது மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு வழங்கப்பட்ட ஓர் ஆண்டு தண்டனையை 10 மாதங்களாக குறைத்துள்ளது. மேலும் தண்டனையையும் நிறுத்தி வைத்துள்ளது.

இதற்கிடையே ஹீதர் சோவால் பாதிக்கப்பட்ட அந்த விமான ஊழியர் அவர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.