Home உலகம் சவுதி அரேபிய மசூதியில் மனித குண்டு தாக்குதல் – 20 பேர் பலி; 50 பேர்...

சவுதி அரேபிய மசூதியில் மனித குண்டு தாக்குதல் – 20 பேர் பலி; 50 பேர் காயம்!

505
0
SHARE
Ad

aripaரியாத், மே 23 – சவுதி அரேபியாவில் உள்ள ஷியா பிரிவு மசூதியில், மனித குண்டு தாக்குதலில், தொழுகையில் ஈடுபட்ட 20 பேர் பலியாயினர், 50 பேர் காயம் அடைந்தனர். சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள குவாதிப் மாகாணத்தில் அல்-கியூதீஹ் என்ற கிராமம் உள்ளது.

இங்கு ஷியா பிரிவினரின் இமாம் அலி மசூதி உள்ளது.  ஷியா பிரிவு தலைவர் இமாம் உசேனின் பிறந்த தினத்தை முன்னிட்டும், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக, அங்கு 150 பேர் நேற்று கூடியிருந்தனர்.

அப்போது அந்த கூட்டத்துக்குள் ஊடுருவிய மனித குண்டு தீவிரவாதி ஒருவர் தனது உடையில் மறைத்து வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்தார்.

#TamilSchoolmychoice

பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில் 20 பேர் உடல் சிதறி பலியாயினர். 50 பேர் படுகாயம் அடைந்தனர். மசூதி முழுவதும் ரத்த கறையாக காட்சியளித்தது.

saudi_attack_002இந்த குண்டு வெடிப்பு சம்பவம் வளைகுடா பகுதியில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களிடையே பதட்டத்தை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். சவுதியில் கடந்தாண்டு நவம்பர் மாதமும் இதேபோல் ஷியா பிரிவு முஸ்லிம்கள் மீது தீவிரவாதி ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 8 பேர் பலியாயினர்.

6 மாதத்துக்குபின் இப்போது இரண்டாவது சம்பவம் நடந்துள்ளது. ஏமனில் போராடும் ஹவுதி போராளிகள் மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்திவருகிறது. இந்த ஹவுதி போராளிகள், ஈரானில் உள்ள ஷியா பிரிவின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.