Home நாடு வெளிநாட்டுக் குடியேறிகளிடையே பரவும் குஷ்டரோகம்!

வெளிநாட்டுக் குடியேறிகளிடையே பரவும் குஷ்டரோகம்!

632
0
SHARE
Ad

Datuk-Seri-Dr-Hilmi-Yahayaபாலிக் புலாவ்,மே25- மலேசியாவில் வந்து தங்கியுள்ள வெளிநாட்டுக் குடியேறிகளிடையே பெருமளவில் குஷ்டரோகம் பரவிவருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று சுகாதாரத் துறையின் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஹில்மி யஹாயா அறிவித்துள்ளார்.

இந்நோய் பரவி வருவது மூன்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு,அதைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை  தீவிரமாகச் செயல்பட்டு வந்த போதிலும்,நோய் பரவுவது இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல்,எச் ஐ வி மற்றும் காசநோய் போன்ற நோய்களும்  அவர்களிடையே பரவியுள்ளதும் அதிர்ச்சியளிப்பதாக  உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஆனால்,நல்லவேளையாக மலேசியா மக்களிடையே கு‌ஷ்டரோகத்திற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எனினும்,நோயற்ற வாழ்விற்கு அனைவரும் உணவுப் பழக்கவழக்கங்களில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.