மே 25 – மாங்காய் நமக்கு அதிக பலன்களை தருகிறது. மாங்காயில் உப்புச்சத்து இல்லாததால், இதனை எடையை குறைக்க நினைப்போர் அச்சமின்றி சாப்பிடலாம்.
உங்களுக்கு நெஞ்செரிச்சல் இருந்தால், மாங்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் மாங்காய் நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும்.
கர்ப்பிணி பெண்களுக்கு காலையில் மிகுந்த சோர்வு மற்றும் வாந்தி ஏற்படும். அப்போது மாங்காயை சாப்பிட்டால், அந்த பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
மாங்காய் சாப்பிட்டால், உடலின் சத்து அதிகரிக்கும். அதிலும் இதனை மதிய உணவிற்கு பின் உட்கொண்டால், மதிய வேளையில் ஏற்படும் அரைத்தூக்க நிலையில் இருந்து விடுபடலாம்.
மாங்காய் கல்லீரலுக்கு நல்லது. எப்படியெனில் மாங்காய் சாப்பிடுவதன் மூலம் பித்தநீர் சுரப்பு அதிகரிப்பதோடு, குடலில் ஏதேனும் பாக்டீரியா தொற்றுகள் இருந்தாலும் அதை சரிசெய்து, குடலை சுத்தப்படுத்தும்.
மாங்காயில் உள்ள வைட்டமின் சி சத்தினால், இரத்த நாளங்களின் உயிர் அனணுக்களை அதிகரிப்பதோடு, புதிய இரத்தணுக்களின் உற்பத்திக்கும் உதவுகிறது.
மலச்சிக்கலால் அவதிப்பட்டால், மாங்காயை உப்பு மற்றும் தேனில் தொட்டு சாப்பிடுங்கள். இதனால் மலச்சிக்கல் உடனே நீங்கும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாங்காயை தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
மாங்காய் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, கோடையில் ஏற்படும் பல்வேறு நோய்களின் தாக்குதல்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும்.