ஹெனான், மே 26 – சீன மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மின்பெட்டி வைக்கப்பட்டிருந்த பகுதியில் பற்றிய தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியது. இதனால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
தீயின் தாக்கம் அதிகரித்ததையடுத்து மருத்துவமனைக்குள் சிக்கி கொண்டவர்களில் 38 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
#TamilSchoolmychoice
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்வும், தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் சீன போலிசார் தெரிவித்தனர்.