Home இந்தியா இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!

574
0
SHARE
Ad

saurav_gangualyகொல்கத்தா, மே 26 – இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.

ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“கங்குலி சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்படலாம் என்று ஊடகங்களில் யூகத்தின் அடிப்படையில் நிறைய செய்திகள் வெளியாகி வருகின்றன”.

#TamilSchoolmychoice

“இந்திய கிரிக்கெட்டின் நலன் கருதியே எந்த முடிவும் எடுக்கப்படும். கங்குலி விஷயத்தில் முடிவு எடுக்க சிறிது காலம் கொடுங்கள். வங்காளதேச தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது”.

“அந்த தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். ஐ.பி.எல். போட்டி தொடர் எந்தவித சர்ச்சையும் இன்றி வெற்றிக்கரமாக நடந்துள்ளது”.

“போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்க அதிக வாய்பு உள்ளது” என அனுராக் தாகூர் கூறினார்.