Home இந்தியா வெயிலின் தாக்கத்தால் இந்தியா முழுவதும் 750-க்கும் மேற்பட்டோர் பலி!

வெயிலின் தாக்கத்தால் இந்தியா முழுவதும் 750-க்கும் மேற்பட்டோர் பலி!

479
0
SHARE
Ad

agniபுதுடெல்லி, மே 26 – இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கத்தால் 750-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், அங்கு தாங்க முடியாத அளவுற்கு அனல் காற்று வீசி வருகிறது. டெல்லியில் அதிக அளவாக 115.5 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.

டெல்லியைச் சுற்றியுள்ள இடங்களில் ஏறக்குறைய இதே அளவு வெப்பநிலையே நிலவி வருகிறது. இதற்கிடையே, வெயில் கொடுமைக்கு பலியானோர் எண்ணிக்கை 750 ஆக உயர்ந்து விட்டது.

இதில், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில்தான் அதிகம்பேர் பலியாகி உள்ளனர். ஆந்திராவில் 335 பேரும், தெலுங்கானாவில் 419 பேரும் உயிரிழந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

summer5667ஆங்காங்கே தண்ணீர் மற்றும் மோர் பந்தல்கள் அமைக்குமாறு அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். மேலும், நேற்று சென்னையில் 100.4 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.