இந்நிலையில் அவர், திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் திடீரெனச் சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பு சுமார் 8 நிமிடம் நீடித்தது.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு வெளியே வந்த பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: “ இந்தச் சந்திப்பு அரசியல் சார்ந்தது இல்லை;நட்பு அடிப்படையிலானது.கருணாநிதியின் சகோதரி மரணம் அடைந்த போது நான் ஊரில் இல்லை.எனவே, அவரிடம் எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கவே இங்கு வந்தேன்” என்று விளக்கமளித்தார்.
Comments