Home நாடு நடுவானில் சிங்கப்பூர் விமானம் இயந்திரக் கோளாறு – 182 பயணிகள் உயிர்தப்பினர்!

நடுவானில் சிங்கப்பூர் விமானம் இயந்திரக் கோளாறு – 182 பயணிகள் உயிர்தப்பினர்!

500
0
SHARE
Ad

Singapore (SIA) 787-9 Artwork K63699சிங்கப்பூர், மே 27 – சிங்கப்பூரிலிருந்து ஷாங்காய் நகருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்றது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் இரு இயந்திரங்களும் தற்காலிகமாக செயலிழந்தது. ஆயினும் விமானியின் சாமர்த்திய செயல்பாட்டால் பயணிகள் அனைவரும் ஷாங்காய் நகரில் பத்திரமாக தரையிறங்கினர்.

‘ஏர் பஸ் ஏ.330 -300’ என்ற அந்த சிங்கப்பூர் விமானம் சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வானில் பறந்து சென்றது. பயணம் துவங்கி மூன்றரை மணி நேரம் கழிந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக திடீரென விமானத்தின் இரு இயந்திரங்களும் மின்சக்தியை இழந்தன.

இந்த இக்கட்டான நேரத்தில் விமானமானது 39000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. ஆனாலும் அந்த நிமிடங்களில் செயல்பாட்டு வழிமுறைகளை சிறப்பாகவும், திறமையாகவும் கையாண்ட விமானி, சில நிமிடங்களில் இரு இயந்திரங்களையும் இயக்கி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார்.

#TamilSchoolmychoice

jpgவிமானியின் சாமர்த்தியத்தால் 182 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் எவ்வித ஆபத்தும் இல்லாமல் ஷாங்காய் நகரில் தரையிறங்கினர்.

பின்னர் இரு இயந்திரங்களையும் நிபுணர்கள் தொடர்ந்து சோதனையிட்டனர். இறுதியில் எவ்வித குறைபாடும் நிகழாமல் என்ஜின்கள் இயல்பாக இயங்கியது குறிப்பிடத்தக்கது.