Home கலை உலகம் மீண்டும் ரஜினியின் ‘லிங்கா’ விவகாரம்: விநியோகஸ்தர்கள் – தயாரிப்பாளர் சங்கம் மோதல்!

மீண்டும் ரஜினியின் ‘லிங்கா’ விவகாரம்: விநியோகஸ்தர்கள் – தயாரிப்பாளர் சங்கம் மோதல்!

482
0
SHARE
Ad

linga_2346586fசென்னை, மே 27 – ‘லிங்கா’ விவகாரம் தொடர்பாக மீண்டும் அப்படத்தின் விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் மோதல் ஏற்பட்டு இருக்கிறது. டிசம்பர் 12, 2014 அன்று ரஜினி நடிப்பில் வெளியானது படம் ‘லிங்கா’.

அத்திரைப்படம் மக்களிடையே வரவேற்பு பெறாமல் தோல்வியை தழுவியது. பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், விநியோகஸ்தர்களுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் தொடர்ச்சியாக போராட்டங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என விநியோகஸ்தர்கள் இறங்கினர்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து மொத்த நஷ்டமான 33 கோடிக்கு தயாரிப்பாளர் சங்கம், ரஜினி தரப்பில் திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தைகள் ஈடுபட்டார்கள்.

அப்பேச்சுவார்த்தையில் இறுதியில் 12.5 கோடி ரஜினிகாந்த் தரப்பில் தாணு மற்றும் திருப்பூர் சுப்ரமணியத்திடம் கொடுத்ததாக விநியோகஸ்தர் சிங்காரவேலன் தெரிவித்தார்.

அப்பணத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருக்கும் பிரித்துக் கொடுக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.

ஆனால், ‘லிங்கா’ பிரச்சனையில் முன்னின்று செயல்பட்ட சிங்காரவேலன் மற்றும் சில விநியோகஸ்தர்களுக்கு மட்டும் 5.9 கோடியை பிரித்துக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை இன்னும் கொடுக்கவில்லை.

இதற்கான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இன்னும் எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

singaravelan_2418696g“திருச்சியில் -1.39 கோடி, நெல்லையில் – 80 லட்சம், செங்கல்பட்டு – 2.30 கோடி, மதுரையில் “- 1.40 கோடி என மொத்தம் 5 கோடியே 89 லட்சம் மட்டும் கொடுக்கப்பட்டது. எஞ்சிய தொகை 6 கோடியே 61 லட்சம் இன்றுவரை கொடுக்கப்படவில்லை.

“பணத்தை தாணுவிடம் கேட்டால், ”திருப்பூர் சுப்பிரமணியனிடம் இருக்கிறது” என்கிறார். ஒரு கட்டத்தில், ”பணமெல்லாம் இல்லை” என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம். சங்கம் தலையிட்டு பேசி முடிக்கப்பட்ட இவ்விஷயத்தில் நாங்கள் நம்பவைத்து ஏமாற்றப்பட்டதாக கருதுகிறோம்”.

“இனியும் பொறுமை காக்கும் நிலையில் இல்லை. ரஜினி சார்பில் கொடுக்கப்பட்ட 12.50 கோடி முழுமையாக சம்பந்தப்பட்ட ‘லிங்கா ‘ பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களிடம் இடைத்தரகர் தலையீடு இன்றி உடனடியாக வழங்கப்பட வேண்டும்”.

“அடுத்தகட்ட நடவடிக்கை சம்பந்தமாக ஆலோசித்து முடிவெடுக்க ‘லிங்கா’ படத்தை திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களின் கூட்டுக் கூட்டம் அடுத்த வாரம் சென்னையில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை சம்பந்தமாக முடிவெடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.