Home கலை உலகம் தனக்காக காத்திருந்த ‘மாப்ள’ விஜய்யை வாழ்த்திய ‘மச்சான்’ சூர்யா!

தனக்காக காத்திருந்த ‘மாப்ள’ விஜய்யை வாழ்த்திய ‘மச்சான்’ சூர்யா!

647
0
SHARE
Ad

vijay and suryaசென்னை, மே 27 – நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா இருவரும் சினிமாவைத் தாண்டி சிறு வயது முதலே நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆரம்பக் காலங்களில் இருவரும் வெற்றி, தோல்விகளில் மாறி மாறி பயணித்தாலும் தங்கள் நட்பை இழக்காமலே இருந்து வந்தனர். காலப்போக்கில் இருவருக்கும் உருவான ரசிகர்கள் பட்டாளம், இவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது.

பொதுமேடைகளில் இருவரும் தங்கள் நட்பு பற்றி பெரிய அளவில் பேசிக் கொள்ளாமலே இருந்து வந்தனர். இந்நிலையில், நடிகர் சூர்யா சமீபத்தில் தனது மாஸ் பட விளம்பரத்திற்காக பிரபல வாரப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவரிடம் விஜய்யுடனான நட்பு பற்றி  கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், “நான் நடிக்கும் படங்கள் பற்றி விஜய்யிடம் கருத்து கேட்பேன். அவரும் தனது படங்கள் பற்றி விவரங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார்.”

“ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு அதை பார்க்க வருமாறு எனக்கு அழைப்பு விடுப்பார். இதை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். கடந்த வருடம் விஜய் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வருமாறு என்னை அழைத்தார். நான் மும்பையில் இருக்கிறேன், சென்னை வர இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிடுமே என்றேன். அதற்கு அவரோ, 12 மணி வரை கொண்டாட்டங்கள் இருக்கும், நீ வா என்றார். விமான நிலையத்தில் இருந்து நேராக விஜய்யின் வீட்டிற்குச் சென்றேன். நான் வரும் வரை அவர் எனக்காக காத்திருந்தார். அதை பார்த்து எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. என் மாப்ள விஜய்யை வாழ்த்திவிட்டு வந்தேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பல வருடங்கள் கழித்து நடிகர் சூர்யா, விஜய்யுடனான தனது நட்பு பற்றி மனம் திறந்து இருப்பது, இருவரின் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.