சூர்யா தனது 2டி நிறுவனம் சார்பாக ஜோதிகா நடிப்பில் வெளியான ’36 வயதினிலே’ படத்திற்கு பிறகு தயாரித்து இருக்கும் படம் தான் ஹைக்கூ. சிம்பு, நயன்தாராவை வைத்து பாண்டிராஜ் இயக்கி வந்த ‘இது நம்ம ஆளு’ படம் பாதியிலேயே நிற்கும் நிலையில், குழந்தைகள் பற்றிய கதை ஒன்றை பாண்டிராஜ், சூர்யாவிடம் தெரிவித்தார்.
படத்தின் கதை சூர்யாவிற்கு பிடித்து போனதால், தானே நடித்து தயாரிப்பதற்கு சூர்யா சம்மதம் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக உடனடியாக தொடங்கப்பட்ட படம் தற்போது நிறைவடைந்துள்ளது.
பசங்க படத்திற்கு பிறகு பாண்டியராஜ் மூன்று படங்கள் இயக்கி இருந்தாலும், பசங்க படம் பெற்றுத் தந்த பாராட்டுகளை இதுவரை வேறு எந்த படமும் பெற்றுத் தரவில்லை. அந்த குறையை ஹைக்கூ போக்கும் என்று அவர் பெரிய அளவில் எதிர்பார்க்கிறார்.
இப்படத்தின் முன்னோட்டத்தைக் கீழே காண்க: