Home நாடு சுல்தான்களை அரசியலில் சம்பந்தப்படுத்த வேண்டாம் – சைனுடின் எச்சரிக்கை

சுல்தான்களை அரசியலில் சம்பந்தப்படுத்த வேண்டாம் – சைனுடின் எச்சரிக்கை

602
0
SHARE
Ad

zainuddinmaidin121212bகோலாலம்பூர்,மே28- ஆட்சியாளர்களாகிய சுல்தான்கள் மீது மக்கள் மிகுந்த பயபக்தி கொண்டிருக்கிறார்கள்.அந்த ஆட்சியாளர்களை அரசியலில் சம்பந்தப்படுத்துவது  ஆரோக்கியமானதல்ல என்று முன்னாள் தகவல் துறை அமைச்சர் டான்ஸ்ரீ சைனுடின் மைதீன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று ஒரு சாரார் கோரிக்கைகள் விடுத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நஜிப் தமக்குப்  பகாங் சுல்தானின் ஆதரவு இருக்கிறது எனப் பிரகடனப்படுத்தியிருப்பது, மக்கள் சுல்தான் மீது வைத்திருக்கும் பயபக்திக்குப் பாதிப்பு ஏற்படுத்திவிடும் என அவர் குற்ப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் ஆதரிக்கும் நபர் வெற்றி பெற்றுவிட்டால் பரவாயில்லை.ஒருவேளை தோல்வியடைந்துவிட்டால் பின்பு நிலைமை  என்ன ஆவது? எனவும் டான்ஸ்ரீ சைனுடின் கேள்வி எழுப்பியுள்ளார்.