Home உலகம் ரோஹின்யா விவகாரத்தில் ஆங் சான் சுகி தீர்வு காண வேண்டும் – தலாய்லாமா வலியுறுத்து

ரோஹின்யா விவகாரத்தில் ஆங் சான் சுகி தீர்வு காண வேண்டும் – தலாய்லாமா வலியுறுத்து

680
0
SHARE
Ad

dalai-lama-suu-kyiசிட்னி, மே 28 – நாளுக்கு நாள் மோசமாகி வரும் ரோஹின்யா சிறுபான்மையின மக்கள் விவகாரத்தில் தலையிட்டு, உடனடியாக பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சு கிக்கு, திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய்லாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வறுமையிலிருந்தும், புத்த மதத்தினர் தங்களுக்கு எதிராக நடத்தும் கொலைவெறித் தாக்குதலில் இருந்தும், காப்பாற்றிக் கொள்ள ஆயிரக்கணக்கான ரோஹின்யா மக்கள், கள்ளத் தோணிகளில் தெற்காசிய நாடுகளுக்கு தப்பியோடி வரும் நிலையில், அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் சு கி அது குறித்து வாய்திறக்கவில்லை.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு வாக்குகள் சரிவு ஏற்படலாம் என்று அஞ்சி தான் அந்நாட்டின் தலைவர்கள் வாய் திறக்க மறுப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இன்று கருத்துத் தெரிவித்துள்ள தலாய்லாமா, இந்த விவகாரத்தில் சு கி கண்டிப்பாக வாய் திறக்க வேண்டும். கடந்த 2012-ம் ஆண்டு மியான்மரில் ராகின் மாநிலத்தில் கொடிய பிரிவினைவாத வன்முறை ஏற்பட்ட போது அப்போதே இரண்டு முறை தெரிவித்தேன். தற்போது அவர்களின் நிலைமை இன்னும் சோகமாகியுள்ளது. உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சு கி தான் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்” என்று ஆஸ்திரேலியாவிலுள்ள செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இன்று தலாய்லாமா பேட்டியளித்துள்ளார்.