Home இந்தியா வங்கதேச கிரிக்கெட் தொடர்: இந்திய அணிக்கு இன்று உடல்தகுதி பரிசோதனை!

வங்கதேச கிரிக்கெட் தொடர்: இந்திய அணிக்கு இன்று உடல்தகுதி பரிசோதனை!

538
0
SHARE
Ad

indian teamவங்கதேசம், மே 28 – வங்கதேச கிரிக்கெட் தொடருக்கு செல்லும் இந்திய வீரர்களுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

வரும் ஜூன் மாதம் இந்திய அணி வங்கதேசம் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இதில் 1 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் அடங்கும்.

இந்நிலையில் போட்டிக்கு முன் இந்திய வீரர்களுக்கு உடல்தகுதி பரிசோதனை மேற்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது. இந்த பரிசோதனை இன்று நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

மேலும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டதால் கோலி கேட்பனாக செயல்படுவார். மேலும், ஒரு நாள் போட்டிகளை வழக்கம் போல் கேப்டன் தோனியே வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.