Home வாழ் நலம் நரம்புத் தளர்ச்சியை நீக்கி, ஞாபக சக்தியை அதிகரிக்கும் பேரீச்சை!

நரம்புத் தளர்ச்சியை நீக்கி, ஞாபக சக்தியை அதிகரிக்கும் பேரீச்சை!

1174
0
SHARE
Ad

Medjool-Dates-NEW1மே 28 – ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விடலாம் எனவும், கருவுற்ற பெண்ணுகள் நாள்தோறும் ஐந்து பேரீச்சை பழங்களை சாப்பிட்டு வந்தால் குழந்தை அரோக்கியமாக பிறக்கும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பேரிச்சம் பழங்களை கண்ணாடி பாட்டிலில் போட்டு, அவற்றில் சுத்தமான தேனை ஊற்ற, மூன்று நாட்கள் கழித்து, தினமும் காலை, மாலை என மூன்று பழங்கள் தொடர்ந்து ஒரு மாதம் வரை சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கி விடும்.

இந்த பழத்தை தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மேலும், பேரீச்சம் பழத்தைத் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

#TamilSchoolmychoice

honey datesபுற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலுடையது பேரீச்சம்பழம். வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த இப்பழம் நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

பேரீச்சம் பழத்தைப் பாலில் போட்டுக் காய்ச்சி ஆறிய பின் அப்பழத்தைச் சாப்பிட்டுப் பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.

dates honeyபேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்துப் பாலில் கலந்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கை, கால் தளர்ச்சி குணமாகும். பாலில் வேகவைத்து, பருகி வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும்.

இரவில் பேரீச்சம் பழத்தில் மூன்றை நீரில் ஊறப் வைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்தக் பழங்களை சாப்பிட்டு வந்தால் நுரையீரை சுத்தப்படுத்தி, உடலை ஆரோக்கியமாக்கும் பேரீச்சம் பழம்.