Home இந்தியா டெசோ மாநாடு மிகப் பெரிய வெற்றி பெறும் : ஸ்டாலின்

டெசோ மாநாடு மிகப் பெரிய வெற்றி பெறும் : ஸ்டாலின்

696
0
SHARE
Ad

stalinமீனம்பாக்கம், மார்ச்.6- டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் இன்று காலை விமானத்தில் டெல்லி சென்றனர். டெல்லியில் டெசோ அமைப்பின் சார்பில் நாளை மாநாடு நடக்கிறது.

இதில் கலந்து கொள்வதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சுகவனம் எம்.பி. ஆகியோர் இன்று காலை 6.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி சென்றனர். அவர்களை கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும்  வழியனுப்பி வைத்தனர்.

முன்னதாக விமான நிலையத்தில் ஸ்டாலின் அளித்த பேட்டி:-

#TamilSchoolmychoice

டெசோ அமைப்பு மாநாடு  டெல்லியில் நாளை நடக்கிறது. இதில் தேசிய தலைவர்களும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு டி.ஆர்.பாலு  நேரடியாக சென்று அழைப்பிதழ் கொடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் கலந்துகொள்வார்கள் என நம்புகிறோம். யாரெல்லாம் கலந்துகொள்கிறார்கள்  யாரெல்லாம் பேசுகிறார்கள் என்ற விவரம் இன்று முடிவு செய்யப்படும்.

மாநாட்டில் இலங்கை தமிழர்களின் நலனுக்காக பல்வேறு முக்கிய தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு விவாதித்து முடிவு எடுக்கப்படும். குறிப்பாக, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் கண்டித்து அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம். மாநாடு மிகப் பெரிய வெற்றி பெறும்.  இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.