Home நிகழ்வுகள் கூலிமில் மலேசிய இந்து சங்கத்தின் 13-ஆம் ஆண்டு பொதுக்கூட்டம்

கூலிமில் மலேசிய இந்து சங்கத்தின் 13-ஆம் ஆண்டு பொதுக்கூட்டம்

981
0
SHARE
Ad

malaysia-indhu-sangam-sliderகூலிம், மார்ச்.6- எதிர்வரும் 8.3.2013 வெள்ளிக்கிழமை மாலை மணி 5 மணிக்கு கோலாங் லாமா, தாமான்  மங்கீஸில் அமைதுள்ள இந்து சங்க கட்டடத்தில் மலேசிய இந்து சங்கத்தின் 13ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அதன் செயலாளர் கு.இராமசாமி  தெரிவித்தார்.

கெடா மாநிலப் பேரவையின் தலைவர் கே.முத்துசாமி தலைமையில் நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டத்தை மலேசிய இந்து சங்கம் கெடா மாநிலப் பேரவையின் தலைவர் தொண்டர்மணி மா.வெலு அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து திறப்புரையாற்றுவார்.

ஆகவே கூலிம் மாவட்ட இந்து சங்க பொறுப்பாளர்கள் மற்றும் அதன் அங்கத்தினர் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் கூட்டத்திற்கு வருகை தரும்படி  குழந்தை மணியம் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice