Home உலகம் வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் -ஒபாமா

வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் -ஒபாமா

693
0
SHARE
Ad

obama

வாஷிங்டன், மார்ச் 6- புற்று நோயால் பாதிக்கப்பட்ட வெனிசுலா அதிபரான ஹியூகோ சாவேஸ் (வயது 58), நேற்று மாலை 4.25 மணிக்கு அதிபர் மரணம் அடைந்ததாக துணை அதிபர் நிக்கோலஸ் மடுரோ அறிவித்தார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா வெனிசுலா அதிபர் ஹுகோ சாவேஸ் மரணமடைந்த செய்தி வெளியான சிலமணி நேரத்திலேயே அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

அதில் அவர் கூறியதாவது:-

அதிபர் ஹுகோ சாவேஸின் மரணத்தினால் சவாலான நேரத்தை எதிர்நோக்கி இருக்கும் வெனிசுலா மக்களுக்கு அமெரிக்க முழு ஆதரவையும் கொடுக்கும். மேலும் அந்நாட்டுடன் ஆக்கப்பூர்வமான உறவை மேம்படுத்திக்கொள்ள  அமெரிக்கா விரும்புகிறது.

வெனிசுலா புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கும் இந்நிலையில் வெனிசுலாவில் ஜனநாயக கொள்கைகளை ஊக்குவிக்கும் சட்டத்தின் வரைமுறைகளை நிலை நிறுத்தும் மனித உரிமைகளை மதிக்கும் புதிய கொள்கைகளை  உருவாக்குவதில் அமெரிக்க உறுதி ஏற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அமரிக்காவின் அதிகாரங்களுக்கு அடிபணியாமல் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் அதிபர் சாவேஸ் என்பது குறிப்பிடத்தக்கது.