Home நாடு அன்வார் நோய்வாய்ப்பட்டார்! செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதி!

அன்வார் நோய்வாய்ப்பட்டார்! செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதி!

781
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 30 – தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிறையில் நோய்வாய்ப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, சில தாமதங்களுக்குப் பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Anwar Prays at Father's funeralகடந்த சில வாரங்களாக அன்வாரின் உடல் எடை குறைந்து வருவதாகவும் சுமார் 6 கிலோ வரை அவர் எடை குறைந்துள்ளார் என்றும் அன்வாரின் குடும்பத்தினர் கண்டறிந்துள்ளதாகவும் பிகேஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஜொஹாரி அப்துல் கூறினார்.

ஜூன் 2ஆம் தேதி கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் அன்வார் அங்கு முழு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார், கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார் என்றும் ஜொஹாரி இன்று பிகேஆர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பலமுறை கோரிக்கை விடுத்திருந்தும் மருத்துவ பரிசோதனைகளுக்கு சிறை நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை என்றும் ஜொஹாரி குற்றம் சாட்டினார்.

அன்வாரின் கழிவுகளில் ரத்தம் வெளியாவதாகவும், அவரது இரத்த அழுத்தம் சீராக இல்லாமல் இருப்பதாகவும், அண்மையில் 163/108 என்ற அளவுகோலை எட்டியதாகவும் ஜொஹாரி மேலும் தெரிவித்தார்.

ஓராண்டுக்கு முன்னால் நிகழ்ந்த கார்விபத்தில் அன்வாரின் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் தற்போது மீண்டும் பிரச்சனை கொடுத்திருப்பதாகவும் அவருக்கு வலியை ஏற்படுத்துவதாகவும் ஜொஹாரி குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் தற்போது சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அன்வாரை சிறையில் சந்தித்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர் என்றும் ஜொஹாரி தெரிவித்தார்.

அவருடன் அன்வாரின் புதல்விகள் நூருல் இசா, நூருல் நூஹா ஆகியோரும் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அன்வாரைக் கண்காணிக்க தங்களின் தரப்பில் மருத்துவர் ஒருவரையும் நியமிக்க அன்வாரின் குடும்பத்தினர் கோரியுள்ளதாகவும், அனுமதி கிடைத்தால் தனி மருத்துவர் ஒருவர் அன்வாரைக் கண்காணித்து வருவார் என்றும் ஜொஹாரி கூறியுள்ளார்