Home நாடு இன்று முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசு உயர்வு

இன்று முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசு உயர்வு

421
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 1 – பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.  இந்த முறை லிட்டருக்கு 10 காசு உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வானது நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

Petrol Pumps

ரோன் 95 மற்றும் டீசலின் விலை இனி 2.05 ரிங்கிட்டாக இருக்கும். ரோன் 97ன் விலை லிட்டருக்கு 2.35 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையானது 6 விழுக்காடு பொருள் சேவை வரியையும் (ஜிஎஸ்டி) உள்ளடக்கியதாகும்.

#TamilSchoolmychoice

இந்தப் புதிய விலை உயர்வை உள்நாட்டு வாணிக அமைச்சு ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவித்தது.