Home இந்தியா வெனிசுலா அதிபர் மரணம் : மன்மோகன் சிங் இரங்கல்

வெனிசுலா அதிபர் மரணம் : மன்மோகன் சிங் இரங்கல்

627
0
SHARE
Ad

manmohanபுது டில்லி, மார்ச்.6- வெனிசுலா அதிபர் ஹூகோ சாவேஸ் மரணமடைந்ததற்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மிகவும் சுறுசுறுப்பான சமூக நீதிக்காக பாடுபட்ட ஒரு நல்ல தலைவரை உலகம் இழந்துவிட்டது. அவரது மறைவுக்கு இந்தியா சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நாட்டு மக்களுக்கும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

வெனிசுலா அதிபராக இருந்த ஹூகோ சாவேஸ் புற்றுநோய் காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.