வேலன்சியா, மார்ச். 13- வெனிசுவேலா நாட்டு மக்களின் செல்வாக்கு பெற்று 14 வருடம் ஒரு அசைக்க முடியாதா சக்தியாக விளங்கியவர் மறைந்த அதிபர் ஹுகோ சவேஸ்.
அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 5-ம் தேதி மரணமடைந்தார். இவரது மரணத்தில் வெளிநாட்டு சதி நடந்திருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எண்ணை வள மந்திரி ரபேல் ரமிரேஸ் அதிபரின் இறப்பிற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் காரணம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அமைக்கப்பட்டுள்ள புதிய கமிஷன் அதிபர் நஞ்சு வைத்து கொல்லப்பட்டதற்கான ஆதரங்களை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இப்பிரச்சினையில் அமெரிக்காவும் வெனிசுவேலாவும் தங்கள் நாடுகளில் உள்ள தூதர்களை வெளியேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீன அதிபரின் மரணத்திற்கு காரணம் இஸ்ரேலில் சதிச்செயலே என்ற கோணத்தில் அங்கு விசாரணை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.