Home உலகம் வெனிசுலா அதிபர் சவேஸ் மரணம்

வெனிசுலா அதிபர் சவேஸ் மரணம்

745
0
SHARE
Ad

venusula-presidenகார்கசஸ், மார்ச்.6-  வெனிசுலா அதிபர் சவேஸ் இன்று காலையில் மரணமடைந்தார்.

புற்றுநோய்க்கு சிகி்ச்சை பெற்று வந்த சவேஸ் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து இன்று மரணமடைந்தார்.கடந்த 3நாட்களாக புற்றுநோய் பாதிப்பிற்குள்ளான வெனிசுலா அதிபர் சவேஸ் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.

வெனிசுலா அதிபராக உள்ள ஹூவேசவேஸ் (58) புற்று நோய் பாதிப்பால் நான்குமுறைக்கு மேல் கியூபா சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீ்ண்டும் கியூபா‌ சென்று சிகிச்சை பெற்றபின்னர், திங்கள் கிழமையன்று நாடு திரும்பிய அவர் ஈர்‌‌னஸ்டோ கிராமத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் அவருக்கு இன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்‌ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலையில் மரணமடைந்தார்.