பயணிகள் கப்பல் ஒன்று சீனாவின் கிழக்குப் பகுதியான நன்ஜிங் என்ற இடத்தில் இருந்து தென்மேற்கு பகுதியான சோங்கிங்கிற்கு 405 பயணிகள், 5 சுற்றுலா நிறுவனம் தொழிலாளர்கள் மற்றும் 47 கப்பல் குழுவினருடன் பயணிக்கத் தொடங்கியது. அப்போது ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக கப்பல் தனது கட்டுப்பாட்டை இழந்து நீரில் மூழ்கியது.
இந்த சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்த நிறுவனம் இதுபற்றி கூறுகையில், “இதுவரை 8 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், மோசமான வானிலை காரணமாக அனைத்தும் தடைபட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட 8 பேரில் கப்பல் மாலுமியும், தலைமை பொறியாளரும் அடங்குவர். அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கப்பல் பயணித்துக் கொண்டிருக்கும் போது கடுமையான சூறாவளியில் சிக்கிக் கொண்டது தெரிய வந்ததுள்ளது.
மீட்புப் பணிகள் தாமதமாவதால், நீரில் மூழ்கியவர்கள் உயிர்பிழைப்பது கடினமாகிவிட்டதாகவும், இதனால் பலர் இறந்திருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.