Home உலகம் ஆற்றில் மூழ்கிய சீன கப்பலில் இருந்து 20 பேர் உயிருடன் மீட்பு!

ஆற்றில் மூழ்கிய சீன கப்பலில் இருந்து 20 பேர் உயிருடன் மீட்பு!

467
0
SHARE
Ad

Over 400 people missing after ship sinks in the Yangtze Riverபீஜிங், ஜூன் 2 – சீனாவில் வீசிய கடும் புயலில் சிக்கிய பயணிகள் கப்பல் 458 பேருடன் ஆற்றில் மூழ்கியது. இது குறித்த தகவல் கிடைத்தவுடன் அப்பகுதிக்கு விரைந்த மீட்பு படையினர் 20 பேரை உயிருடன் மீட்டனர்.

ஈஸ்டர்ன் ஸ்டார் என்றழைக்கப்படும் அந்த பயணிகள் கப்பல் ஜியாங்சு மாகாணத்தின் தலைநகரான நான்ஜிங்கிலிருந்து, தென்மேற்கு சீனாவில் உள்ள சாங்கிங்கிற்கு சென்று கொண்டிருந்தது.

Over 400 people missing after ship sinks in the Yangtze Riverஇந்நிலையில் நேற்றிரவு 9.30 மணியளவில் ஹுபேய் மாகாணம், ஜியான்லி பகுதியில் உள்ள யாங்ட்சே நதியில் அக்கப்பல் சென்று கொண்டிருந்தபோது, கடும் புயலில் சிக்கி ஆற்றில் மூழ்கியதாக யாங்ட்சே நதி வழிநடத்தும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

Over 400 people missing after ship sinks in the Yangtze Riverஇதையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் ஆற்றில் தத்தளித்த 20 பேரை உயிருடன் மீட்டனர். இச்செய்தியை அறிந்த சீன அதிபர் ஜின்பிங், அனைத்து விதமான மீட்பு நடவடிக்கைகளையும் விரைந்து செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Over 400 people missing after ship sinks in the Yangtze Riverஅந்நாட்டு பிரதமர் கெக்கியாங் மற்றும் துணை பிரதமர் மா கய் ஆகியோரும் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை வழிநடத்தி வருகின்றனர்.