Home அவசியம் படிக்க வேண்டியவை ரஞ்சித் இயக்கும் ரஜினி படம் மலேசியாவில் தொடங்குகிறது – தயாரிப்பாளர் தாணு அறிவிப்பு!

ரஞ்சித் இயக்கும் ரஜினி படம் மலேசியாவில் தொடங்குகிறது – தயாரிப்பாளர் தாணு அறிவிப்பு!

528
0
SHARE
Ad

rajini vs ranjithசென்னை, மே 2 – ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ஆகஸ்ட் மாதம் தொடங்கயிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி அட்டக்கத்தி ரஞ்சித் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்திற்கு ‘மெட்ராஸ்’ ஒளிப்பதிவாளர் முரளி ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

கபிலன், கானா பாலா, உமாதேவி ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர். ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்குகிறது. மொத்தம் 60 தினங்கள் மலேசியாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து ஹாங்காங், தாய்லாந்து மற்றும் சென்னையில் 60 தினங்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். படத்தின் நாயகி உள்பட பிற நடிகர், நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது என படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.