Home இந்தியா இன்று கருணாநிதிக்கு 92-வது பிறந்தநாள் – தமிழகம் முழுவதும் திமுகவினர் விழாக்கோலம்!

இன்று கருணாநிதிக்கு 92-வது பிறந்தநாள் – தமிழகம் முழுவதும் திமுகவினர் விழாக்கோலம்!

558
0
SHARE
Ad

karunanidhibirthday-2-9600சென்னை, ஜூன் 3 – திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 92-வது வயதில் அடியெடுத்து வைக்கின்றார். இதையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் வழக்கமான உற்சாகத்துடன் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

அதிகாலையில் சிஐடி காலனியிலுள்ள இல்லத்தில் மரக்கன்றை நட்டார் கருணாநிதி. அப்போது, டி.ஆர்.பாலு, கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன், வசந்தி ஸ்டான்லி உள்ளிட்டோர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் கோபாலபுரம் சென்ற கருணாநிதிக்கு தொண்டர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இன்று காலையில் சென்னை காமராஜர் சாலையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

#TamilSchoolmychoice

karunanidhi-birthday-celebrபின்னர் பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர், காலை 9 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள், நிர்வாகிகளின் வாழ்த்துகளை பெறுகிறார்.

பொதுக்கூட்டம் மாலை 6 மணியளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி உரையாற்ற இருக்கிறார். இதற்கான முரசொலி அலுவலகம் போல பிரம்மாண்ட மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது.