Home நாடு “நான் பதவி விலகவில்லை” – ஹிஷாமுடின் டுவிட்டரில் தகவல்

“நான் பதவி விலகவில்லை” – ஹிஷாமுடின் டுவிட்டரில் தகவல்

557
0
SHARE
Ad

hishamuddinகோலாலம்பூர், ஜூன் 3 – விரைவில் அமைச்சரவையில் இருந்து தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹூசைன் விலகப்போவதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

இது குறித்து இன்று காலை தனது டுவிட்டர் கணக்கில் தன்னைப் பின்பற்றுபவர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த ஹிஷாமுடின், “இல்லை.. நான் பதவி விலகப் போவதில்லை. சில பொறுப்பற்றவர்கள் அது போன்ற எதிர்மறை கருத்துக்களை கிளப்பி வருகின்றார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில், பிரதமர் நஜிப் துன் ரசாக், 1எம்டிபி விவகாரத்தில் தன்னைப் பின்பற்றாதவர்கள் பதவி விலகலாம் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, ஹிஷாமுடின் அடுத்த 48 நேரத்திற்குள் பதவி விலகுவார் என நட்பு ஊடங்களில் ஆரூடங்கள் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.