கோலாலம்பூர், ஜூன் 3 – நேற்று இரவு மெஜெஸ்டிக் தங்கும்விடுதியில் நடைபெற்ற அமைச்சர்களுக்கான சிறப்புக் கூட்டத்தில் துணைப்பிரதமர் மொகிதின் யாசின் கலந்து கொள்ளவில்லை.
ஆஸ்திரேலியா பயணம் முடிந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு இரவு 8.45 மணியளவில் தான் மொகிதின் வந்து சேர்ந்ததால், அவர் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.
எனினும், இப்படி ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெறுவது மொகிதினுக்கு தெரியும் என்றும், அவர் தாமதமாக வந்தடைந்ததால் தான் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் மொகிதினுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அக்கூட்டத்தில், 1எம்டிபி விவகாரம் குறித்து இரண்டாவது நிதியமைச்சர் அகமட் ஹூஸ்னி ஹனாட்ஸ்லா விளக்கமளித்தார் என்றும், பிரதமர் நஜிப் உடன் 16 அமைச்சர்கள் அக்கூட்டத்தில் காணப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், ஹூன்ஸி அக்கூட்டத்தில் 1எம்டிபி விவகாரம் குறித்து விவாதிக்கவில்லை என முன்னணி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.