Home நாடு சட்டம் இந்நாட்டில் இந்தியர்களுக்கு மட்டும் செத்து விட்டதா? – ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி!

சட்டம் இந்நாட்டில் இந்தியர்களுக்கு மட்டும் செத்து விட்டதா? – ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி!

860
0
SHARE
Ad

waytha,கோலாலம்பூர், ஜூன் 3 – அண்மையில் நமது சமுதாயம் சம்பந்தப்பட்ட சில விவகாரங்கள் குறித்து கருத்துரைத்துள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, “நம் நாட்டின் சட்ட அமைப்பு நம் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தவறிவிட்டது. சட்டம் இந்நாட்டில் இந்தியர்களுக்கு செத்து விட்டதாக தோன்றுகிறது” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

நீதித்துறை, காவல்துறை மற்றும் அரசு கழகங்களும் இனவாதிகளாக உருமாறி உள்ளனர் என்றே நான் கருதுகிறேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில்: “நீதித்துறை மற்றும் காவலர்கள் என் வாயை அடைக்க மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அவர்கள் உண்மையின் வாயை அடைக்க முடியாது.உண்மை ஒரு போதும் சாகாது” என்றார்.

#TamilSchoolmychoice

அவர் தனது அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார்:-

“கெட்கொ” (Gatco) மக்கள் நில அபகரிப்பு பிரச்சனையில் காவலர்கள், ரோந்து பணியாளர்கள், மாநில அரசும் இந்த நில அபகரிப்பில் கூட்டு சதியாக இருகின்றனர். இந்த சதிக் கூட்டத்துடன் சட்டமும் சேர்ந்து அங்கு வேலை செய்யும் மக்களை சொல்ல முடியாத அளவுக்கு தொடர்ந்து பல வருடங்களாக துன்புறுத்தி வருகிறது”.

“சில நாட்களுக்கு முன்பு இந்த அப்பாவி பெண்கள் முன்னிலையில் நெகிரி செம்பிலான் காவல் துறையை சேர்ந்த மேல் அதிகாரி, நாட்டின் காவல் துறைக்கே களங்கம் விளைவிக்கும் அருவருப்பான செயல் ஒன்றை செய்தார்”.

“இந்த சார்ஜன் தன் சிலுவாரை அவிழ்த்து பாலியல் வன்முறை தூண்டி விட்டு அந்த பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார். இதன் தொடர்பில் போலீஸ் புகார் செய்த போதிலும், பெரிதாக அந்த முறை கேடான செயலை புரிந்த அதிகாரிக்கு தண்டனை ஏதும் கிடைக்கப் போவதில்லை”.

kg getco police man“அவரை ஒருவேளை இடம் மாற்றல் செய்வார்கள்.ஏன், இந்த ஈன செயலை புரிந்த அவருக்கு பதவி உயர்வு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. மேலும் போலீஸ் காவலில் சசிகுமார் என்ற இளைஞனின் மரணம் குறித்து அட்டர்னி ஜெனரல் இன்னும் மௌனம் சாதித்து கொண்டிருக்கிறார்”.

“இந்த இளைஞனின் உடல் சவக்கிடங்கில் இன்னும் கிடக்கிறது. இவரின் இறப்பின் மர்மத்தை கண்டுபிடிக்கும் வகையில் சிறப்பு புலன் விசாரணை நடந்தேறி இருக்கவேண்டும். இதுவரையில் அப்படி ஒன்றும் இல்லை”.

“இந்த இளைஞனுக்கு நியாமான தீர்ப்பு வழங்க தவறி விட்டது சட்டம். ஒரு சார்டின் மற்றும் அரிசி திருடியதற்காக இவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அநீதியாய் தோன்றுகிறது”.

“கூடிய விரைவில் இதை நியாயப் படுத்தும் வகையில் மரணமுற்ற இளைஞனுக்கும் ஒரு கொடூரமான குற்றக் கும்பலுக்கும் தொடர்பு உண்டு என்ற ஜோடிப்பு வேலைகள் நடந்தேறி அனைவரையும் நம்ப வைத்துவிடும்”.

“அதோடு இந்நாட்டில் நமது இந்திய இளைஞர்கள் மீது ஒரு தவறான கண்ணோட்டத்தையும் உருவாக்கிவிடும். ‘கெட்கொ’ (Gatco) அடக்கு முறையாளர்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான புகார்கள் காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டுவிட்டது”.

shashikumar a l selvam death“மேலும் அண்மையில் போலீஸ் காவலில் இருந்து மரணம் அடைந்த 20 வயது இளைஞனின் பாட்டி காவல் துறையிடம் கொடுத்த புகார் இந்த ஜனநாயக நாட்டில் மயான அமைதியாய் போய்விடும். இதன் தொடர்பில் எந்த நடவடிக்கையும் சட்டம் எடுக்கபோகபோவதில்லை”.

“பண பலம் உடையவர்கள் அயல் நாட்டில் வசதி வாய்ப்புகளுடன் இங்கிருந்து மாற்றலாகி அங்கு குடியேறிவிடுவார்கள். ஆனால் இந்த நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் நிலை என்னவாகும்?”

“இந்த ஜனநாயக நாட்டின் தர்ம தேவதையின் அர்த்தமற்ற அமைதியால் சொந்த நாட்டிலே இவர்களுக்கு அடிமைகளாக மாறி பிழைப்பு நடத்த வேண்டிய சூழ்நிலைதான் உருவாகும்”

-இவ்வாறு ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.