Home இந்தியா மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களா? அறிந்து கொள்ள மென்பொருள் வந்துவிட்டது!

மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களா? அறிந்து கொள்ள மென்பொருள் வந்துவிட்டது!

494
0
SHARE
Ad

softசென்னை,ஜூன்3- அரசாங்க அதிகாரிகளிடம் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது அவர்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன என்பதை அறிந்து கொள்ள புதிய மென்பொருள் ஒன்றை அதிமுக அறிமுகம் செய்துள்ளது.

அரசு அலுவலகங்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் கொடுக்கப்படும் மனுக்கள் எல்லாம்,கொடுத்த வேகத்திலேயே குப்பைத்தொட்டிக்கோ மசால் வடை மடிக்கும் பெட்டிக்கடைக்கோ வந்துவிடும் என்ற விமர்சனம் மக்கள் மத்தியில் வலுவாக இருந்து வருகிறது.அது ஒரு வகையில் உண்மையும் கூட!

இதனால் பல வேலைகள் முடிக்கப்படாமலே முடங்கிப் போகும் அவல நிலை நீடிக்கிறது.அந்த அவலத்தைப் போக்கும் ஓர் அரிய மென்பொருளை அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி தற்போது உருவாக்கி உள்ளது.

#TamilSchoolmychoice

இந்த மென்பொருளின் செயல்பாடுகள் பற்றிய விவரம் பின்வருமாறு:

பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் தாளில் இருந்தால் அவற்றை ‘ ஐபேடு’ மூலம் நிழற்படம் எடுத்து,ஒவ்வொன்றிற்கும் எண் ஒன்றைத் தொடர் வரிசையில் தருவார்கள்.

அந்த மனுக்கள் பரிசீலிக்க வேண்டிய துறை அல்லது நபருக்கு உடனடியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

எந்தத் தேதியில் யாருக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டது என்ற தகவலும் பதிவு செய்யப்படும்.

மனுதாரரின் தொலை பேசி எண் மற்றும் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்களும் மனுவுடன் சேர்த்துப் பெற்றுக் கொள்ளப்படுவதால், மனுவுக்குத் தீர்வு பெறப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து பொது மக்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு,அந்த அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்துத் தீர்வு காணவும்  வசதி ஏற்படுத்தப்படுகிறது.

பொது மக்கள் தரும் மனுக்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளவும்,அதனைத் துரிதப்படுத்தவும்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தாமதம் குறித்து அவ்வப்போது  விசாரிக்கவும் இந்தப் புதிய முறை பயன்படுகிறது.

இணையத்தின் மூலம் சம்பந்தப்பட்ட மனுக்களின் நிலையைக் கண்காணிக்க இந்த மென்பொருள் மிகவும் உதவுகிறது.இதனால் யாரும் எந்தச் சாக்குப் போக்கும் சொல்லித் தப்பிக்க முடியாது என்பது இதன் சிறப்பாகும்.

இந்தியாவிலேயே முதன் முறையாக இத்தொழில்நுட்பம் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.