Home நாடு மாட் மலாயா போதை மருந்து உட்கொண்டது பரிசோதனையில் உறுதி!

மாட் மலாயா போதை மருந்து உட்கொண்டது பரிசோதனையில் உறுதி!

504
0
SHARE
Ad

Mohd Jusnaidi Omar

கோத்தகினபாலு, ஜூன் 4 – கோத்தா கினபாலு மலையடிவாரத்தில் அமைந்துள்ள குண்டாசாங் பகுதியில் திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட மாட் மலாயா போதை மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சபா காவல்துறையினரால் கடந்த சில நாட்களாக தீவிரமாக தேடப்பட்டு வந்தார் மாட் மலாயா. முன்னாள் கூட்டரசு அமைச்சர் டத்தோஸ்ரீ நோ ஓமாரின் சகோதரரான இவர் மீது வாகனங்களைப் பழுது பார்க்கும் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மே 6ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தின்போது, ஒரு குண்டு அந்நபரின் வலது காலில் பாய்ந்தது. இதையடுத்து தலைமறைவான மாட் மலாயாவை போலீசார் தேடி வந்தனர்.

“மாட் மலாயாவுடன் தங்கியிருந்த 24 வயதான அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார். எனினும் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அவரது மனைவியை விடுவித்துள்ளோம். அவரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.

“மாட் மலாயா போதை மருந்து உட்கொண்டது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன” என்று சபா காவல்துறை ஆணையர் ஜலாலுடின் அப்துல் ரஹ்மான் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.