மலாக்கா, ஜூன் 4 – அலோர் கஜாவில் உல்லாச விடுதி (Resort) ஒன்றில் வளர்க்கப்பட்ட புலி ஒன்று அதன் பராமரிப்பாளரைக் கடித்துக்குதறியதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்தோனேசியாவைச் சேர்ந்தவரான அந்த 34 வயது பணியாளர், கடந்த 8 ஆண்டுகளாக அந்த புலியைப் பராமரித்து வந்ததாகக் கூறப்படுகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதியம் 2 மணியளவில் புலிக்கு உணவு கொடுக்க சென்ற அந்த பராமரிப்பாளரை, எதிர்பாராத வகையில் திடீரென புலி தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த அவர் தம்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
புலி அவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணம் என்னவென்று ரிசார்ட் நிர்வாகம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றது.
அதேவேளையில், மலாக்கா தேசிய பூங்கா மற்றும் வனவிலங்குத்துறை இயக்குநர் நோர்ஸாகியா ஆனோன் கூறுகையில், “அந்த புலியின் நடவடிக்கையைக் கண்காணிக்கவுள்ளோம். இந்த சம்பவத்திற்குக் காரணம் ரிசார்ட் நிர்வாகத்தின் கவனக்குறைவா? என்பதையும் விசாரணை நடத்தவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.