பீஜிங், ஜூன் 4 – சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் கடந்த 1-ஆம் தேதி 456 பேருடன் நான்ஜிங் நகரில் இருந்து சோங்கிங் நகர் நோக்கி சென்ற பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சீன பிரதமர் லீ கெகியாங், நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு, ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி 26 சடலங்களை மீட்டுள்ளதாக மீட்புபடையினர் தெரிவித்தனர். தற்போது, இறந்தவர்களின் சடலங்கள் 65-ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும், மழையின் காரணமாக மீட்பு பணிகள் தாமதமாவதாக மீட்பு குழுவினர்கள் தெரிவித்தனர்.