Home கலை உலகம் ‘புலி’ படத்திலும் பாடல் பாடிய விஜய்!

‘புலி’ படத்திலும் பாடல் பாடிய விஜய்!

564
0
SHARE
Ad

Vijay_Sing_Song_Puliசென்னை, ஜூன் 4 – விஜய் இதுவரை தனது படங்களில் பாடிய பாடல்கள் அனைத்தும் மிகவும் பிரபலமைடைந்து வெற்றிபெற்றது. அந்த வரிசையில் ‘துப்பாக்கி’ படத்தில் இவர் பாடிய ‘கூகுள் கூகுள்’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து ‘ஜில்லா’ படத்தில் பாடிய ‘கண்டாங்கி கண்டாங்கி’ பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற பாடலாக அமைந்தது. இதையெல்லாம் விட, கத்தி படத்தில் இவர் பாடிய ‘செல்பிபுள்ள’ பாடல் ரசிகர்களை துள்ளி எழுந்து ஆட்டம் போட வைத்தது.

இதைத் தொடர்ந்து இவர் நடித்து வரும் ‘புலி’ படத்திலும் விஜய் ஒரு பாட்டு பாடினால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக ‘புலி’ படத்திற்காக விஜய் ஒரு பாட்டு பாடியுள்ளார்.

#TamilSchoolmychoice

VJ2இந்த பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் இந்த பாடல் பிரமாதமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்ரீதேவி கபூர், நான் ஈ சுதீப் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியன்று படத்தை வெளியிட படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.