Home நாடு “நீக்கப்படுவதற்கு முன் நீங்களாக விலகிக் கொள்ளுங்கள்” – அமைச்சர்களுக்கு சாஹிட் வலியுறுத்து

“நீக்கப்படுவதற்கு முன் நீங்களாக விலகிக் கொள்ளுங்கள்” – அமைச்சர்களுக்கு சாஹிட் வலியுறுத்து

452
0
SHARE
Ad

Ahmad-Zahid-Hamidiபுத்ராஜெயா, ஜூன் 4 – பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது நம்பிக்கை இல்லாத அமைச்சர்கள், நீக்கப்படுவதற்கு முன்பு தானாகவே பதவி விலகிக் கொள்ளலாம் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

நஜிப் துன் ரசாக் எடுக்கும் எல்லா முடிவுகளையும் அமைச்சர்கள் ஏற்றுக்கொள்வது “கட்டாயம்” ஆகும் என்றும் சாஹிட் ஹமீடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அமைச்சரவையில் நியமனங்கள் செய்வதற்கான முழு அதிகாரம் பிரதமருக்கு உள்ளது போல், நீக்குவதற்கும் அதிகாரம் உள்ளது”

#TamilSchoolmychoice

“அமைச்சரவை உறுப்பினர்களான நமக்கு, பிரதமரின் முடிவுகளை ஏற்றுக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று”

“பிரதமரின் முடிவுகளின் மீது நம்பிக்கை இழந்த அமைச்சர்கள் அல்லது அவரது முடிவுகளை எதிர்த்து கேள்வி கேட்கும் அமைச்சர்கள், வெளிப்படையாக அறிக்கை விடும் அமைச்சர்கள், மரியாதையாகப் பதவி விலகுவது தான் சிறந்தது. பிரதமராகப் பார்த்து பதவி நீக்கம் செய்யும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை” இவ்வாறு இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றில் 1எம்டிபி விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சாஹிட் பதிலளித்துள்ளார்.