Home நாடு தாமான் துன் பூங்காவில் பதுங்கி இருக்கும் கொள்ளையர்கள்! காவல்துறை சுற்றிவளைப்பு!

தாமான் துன் பூங்காவில் பதுங்கி இருக்கும் கொள்ளையர்கள்! காவல்துறை சுற்றிவளைப்பு!

497
0
SHARE
Ad

48417957கோலாலம்பூர், ஜூன் 4 – தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் அமைந்திருக்கும் தாமான் லெம்பா கியாரா பூங்காவில் மறைந்திருக்கும் ஆயுதமேந்திய கும்பலைப் பிடிக்க காவல்துறை தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றது.

நேற்று அதிகாலை அந்தப் பகுதியில் சில வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற அவர்கள் ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினரைக் கண்டதும் பூங்காவிற்குள் சென்று பதுங்கிக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், நேற்று முதல் அப்பூங்காவிற்குள் நுழைய பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, காவல்துறை தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இது குறித்து பிரிக்பீல்ட்ஸ் காவல்துறை தலைமைத் துணை ஆணையர் முகமட் அஸ்லீ அப்துல்லா கூறுகையில், பூங்காவில் பதுங்கி இருப்பவர்கள் வெளிநாட்டினர் என நம்பப்படுகின்றது. அதிகாலை 5 மணியளவில் காவல்துறையினரைக் கண்டதும் அவர்கள் கொள்ளையடிக்கும் திட்டத்தைக் கைவிட்டு பூங்காவில் உள்ள வனப்பகுதியில் பதுங்கிக் கொண்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.