Home இந்தியா அனைத்துலக யோகா தின விழாவிற்கு சோனியா, ராகுலுக்கு அழைப்புவிடுத்த மோடி – விமர்சித்த காங்கிரஸ்!

அனைத்துலக யோகா தின விழாவிற்கு சோனியா, ராகுலுக்கு அழைப்புவிடுத்த மோடி – விமர்சித்த காங்கிரஸ்!

501
0
SHARE
Ad

modi-sonia-rahul-600புதுடெல்லி ஜூன் 4 – ஜூன் 21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படவுள்ள அனைத்துலக யோகா தின விழாவிற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை இவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு, அழைத்துள்ள மோடி அரசை கடுமையாக விமர்சித்துள்ளது காங்கிரஸ்.

காங்கிரஸ் கட்சி மேலிடங்களுக்கு விடுத்த அழைப்பிதழ், முற்றிலுமாக மிகைப்படுத்தப்பட்ட ஓன்று என்றும், பாசாங்குத்தனமான விஷயமாக இதை தாம் கருதுவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

வார்த்தைகளில் மட்டுமே அரசை, மோடி நடத்துவதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்,தனக்கும், தன் அரசுக்கும் ஆளுமை அதிகம் இருப்பதாக வார்த்தைகளால் மட்டுமே மோடி கூறி வருவதாகவும், ஆனால், அதை செயல்படுத்துவதை பற்றி சிந்திக்கக்கூட அவரால் முடியவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

தன்னை பற்றி விளம்பரப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டும் மோடியின், மிகப் பெரிய வித்தை இது என காங்கிரஸ் கூறியுள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலமாக உலகளவில் ஒரு செய்தியை மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஜூன் 21-ஆம் தேதியை அனைத்துலக யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.