Home உலகம் கானா எண்ணெய் நிலையத்தில் தீ விபத்து – 73 பேர் பலி!

கானா எண்ணெய் நிலையத்தில் தீ விபத்து – 73 பேர் பலி!

646
0
SHARE
Ad

petrol-station-blast-ghana-750x347கானா, ஜூன் 5 – மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில், வாகன எண்ணெய் நிலையம் ஒன்று தீப்பிடித்து வெடித்துச் சிதறியதில் மழைக்காக அங்கு ஒதுங்கியிருந்த 73 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அந்த நாட்டு தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பில்லி அனாக்லேட் கூறியதாவது: “அக்ரா நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வாகன எண்ணெய் நிலையம் ஏராளமான மக்கள் குழுமியிருந்தபோது, புதன்கிழமை நள்ளிரவில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது”.

GAZA01-master675“விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வியாழக்கிழமை அதிகாலை முதல் மீட்கப்பட்டு வருகின்றன”.

#TamilSchoolmychoice

“இதுவரை 73 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப்பணிகள் முழுமையடைந்த பின்புதான் இந்த விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதைக் கூற முடியும்” என்றார் அவர்.