நீதிபதி சாலாமியா சாலே முன்பு, கானா தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதால், அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி, இரவு 10.20 மணியளவில், ஆரா டாமன்சாரா, ஜாலான் பிஜெயு 1ஏ/1, தாமான் பெருமாஹான் அடில்லியா என்ற குடியிருப்புப் பகுதியின் பாதுகாவலர் அலுவலகத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம், பிரிவு 427-ன் கீழ் இக்குற்றத்திற்கு 2 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ வழங்கும் வகையில் சட்டத்தில் இடமுள்ளது குறிப்பிடத்தக்கது.