Home இந்தியா ஆப்கான் எல்லைக்கு இடம் பெயர்ந்தான் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம்!

ஆப்கான் எல்லைக்கு இடம் பெயர்ந்தான் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம்!

522
0
SHARE
Ad

thaavuuthபுதுடில்லி, ஜூன் 6- முப்பை தொடர் குண்டுவெடிப்பின் முக்கியக் குற்றவாளி தாவூத் இப்ராஹிம் இதுநாள் வரை பாகிஸ்தான் தலைநகராகிய கராச்சியில் தலைமறைவாகத் தங்கியிருந்ததாகக் கண்டறியப்பட்டது.

அவன் தற்போது அங்கிருந்து இடம் பெயர்ந்து பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிக்குச் சென்று தங்கியுள்ளதாக உளவுத் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சக உயர் அதிகாரி கூறியதாவது:

#TamilSchoolmychoice

பாகிஸ்தான் அரசு நிர்வாகத்தினர் உதவியுடன் அவன் பல்வேறு இடங்களில் தங்கி வருகிறான்.எந்த ஒரு இடத்திலும் அவன் ஒரு மாதத்திற்கு மேல் தங்குவதில்லை.

கடந்த 15 நாட்களுக்கு முன் கராச்சி நகரில் தங்கியிருந்த அவன், தற்போது ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளான்.

அவன் தங்கும் இடங்கள் தொடர்பாக, இந்தியா சேகரித்துள்ள தகவலும், அமெரிக்கா உட்பட பல வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் சேகரித்துள்ள தகவலும் ஒன்றாக உள்ளன.

தாவூத் இப்ராஹிமுக்கு எதிராக, அனைத்துகலகக் காவல்துறை மூலம் எச்சரிக்கைக் கடிதமும்  விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தாவூத் இப்ராகிமுக்கு எதிரான பல ஆதாரங்களும், ஆவணங்களும் பாகிஸ்தான் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

இருப்பினும், தாவூத்தைக் கைது செய்யவோ அல்லது அவன் மீது வழக்கு தொடரவோ பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனக் குற்றம் சாட்டினார் அவர்.