Home நாடு நிகழ்ச்சியை ரத்து செய்தது நான் – பிரதமர் அல்ல: காலிட் அபுபாக்கர்

நிகழ்ச்சியை ரத்து செய்தது நான் – பிரதமர் அல்ல: காலிட் அபுபாக்கர்

454
0
SHARE
Ad

khalid1கோலாலம்பூர், ஜூன் 6 – ‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியை ரத்து செய்தது காவல்துறை தான் என்றும் பிரதமர் அந்நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கூறவில்லை என்றும் தேசிய காவல்படைத் தலைவர் காலிட் அபுபாக்கர் தெரிவித்துள்ளார்.

நேற்று புத்ரா அனைத்துலக வாணிப மையத்தில் நடைபெறவிருந்த அந்நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் பங்கேற்பதாக இருந்தார். அப்போது 1எம்டிபி உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிரதமர் நஜிப் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மாறாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக காவல்துறை அறிவித்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதைக் குறித்து காலிட் அபுபாக்கர் விளக்கம் அளித்துள்ளார். பிரதமருக்கு இந்த முடிவில் விருப்பமில்லை என்றாலும் காவல்துறை அத்தகைய முடிவை எடுக்க வேண்டியிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

“நிகழ்ச்சியை நான் ரத்து செய்தது தொடர்பில் பிரதமருக்கு மகிழ்ச்சி இல்லை. எனினும் பிரதமரின் பாதுகாப்பு மற்றும் இதர காரணங்களுக்காக நான் இவ்வாறு செய்ய வேண்டியிருந்தது,” என்று காலிட் அபுபாக்கர் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி நடைபெற இருந்த அரங்கில் பாதுகாப்பு பிரச்சினைகள் இருந்ததுதான் காவல்துறை நிகழ்ச்சியை ரத்து செய்யக் காரணமா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, காலிட் அபுபாக்கர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.