Home கலை உலகம் சார்லி சாப்ளினின் பிரபலமான சுருள்படக் கருவி!

சார்லி சாப்ளினின் பிரபலமான சுருள்படக் கருவி!

655
0
SHARE
Ad

சார்லி-சாப்ளின்-4

சென்னை, ஜூன்6- தனது தனித்துவமான நடிப்பால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை மேதை சார்லி சாப்ளின்.

ஊமைக்காலத் திரைப்படத்தில் கூட தனது கற்பனை வளத்தால் உயர்வான படைப்புகளைத் தந்தவர் அவர்.

#TamilSchoolmychoice

1918-ஆம் ஆண்டு அவர் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த போது அப்போதைய 2000 அமெரிக்க டாலருக்கு ‘மிக்கிமவுஸ்’ போன்ற காதுகளை உடைய Bell and Howell 2709 வடிவ சுருள்படக் கருவியை (film camera) வாங்கி, ஹாலிவுட்டில் சாப்ளின் படப்பிடிப்புத் தளத்தை உருவாக்கினார்.

அக்காலத்தில் மகிழுந்தில்(car) எப்படி’ ரோல்ராய்ஸ்’ பிரபலமோ அப்படிச் சுருள்படக் கருவியில் இது பிரபலம்.

இதன் மூலம் சாப்ளின் The great dictator, Modern times, The kid, The golden bush போன்ற படங்களைத் தயாரித்துப் பெரு புகழும் பணமும் சம்பாதித்தார்.

சார்லி சாப்ளின் இந்தியத் தலைவர்களைப் பெரிதும் நேசித்தார். தனது அபூர்வ சுருள்படக் கருவி மூலம் தனக்குப் பிடித்தனமான தலைவர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொள்வார்.

அதில் 74 ஆண்டுகளுக்கு முன் அவர் எடுத்த புகைப்படம் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்தப் புகைப் படத்தில் மகாத்மா காந்தி, சரோஜினி நாயுடு, அன்னிபெசன் அம்மையார் ஆகியோர் உள்ளனர்.

Chaplin_and_Gandhiஇந்தக் கருவி இன்னும் நல்ல நிலையில் இயங்கி வருகிறது. சார்லி சாப்ளினுக்குப் பிறகு பலரது கை மாறி, 2011- ஆம் ஆண்டு  லண்டனில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனம் 1,80,000 அமெரிக்க டாலருக்கு இதனை விற்பனை செய்துள்ளது.