Home இந்தியா விண்ணப்பத்தில் இந்தியனாம்;உண்மையில் இல்லையாம்! கிலானியின் தகிடுதத்தம் !

விண்ணப்பத்தில் இந்தியனாம்;உண்மையில் இல்லையாம்! கிலானியின் தகிடுதத்தம் !

517
0
SHARE
Ad

kilani

காஷ்மீர், ஜூன்6- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செயல்படும் ஹீரியத் மாநாடு அமைப்பின் தலைவர் சையது ஷா கிலானி. வயது 88.

இவர் ஒரு பிரிவினைவாதி. இந்தியாவில் இருந்து கொண்டே, இந்தியாவின் அனைத்துச் சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டே  இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்.

#TamilSchoolmychoice

இத்தகைய நடவடிக்கைகளால் இவரது  கடவுச் சீட்டு( பாஸ்போர்ட்) கடந்த  2011-ஆம் ஆண்டு முடக்கப்பட்டது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் வசிக்கும் இவரது மகளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போக, அவரைப் பார்க்கச் செல்ல விரும்பினார். இதற்காகக் கடவுச் சீட்டு பெறுவதற்காக இந்திய வெளியுறவுத்  துறையிடம் இணையத்தின் வழி விண்ணப்பித்தார்.

ஆனால்,ஸ்ரீநகரில் உள்ள மண்டல கடவுச்சீட்டு அலுவலத்திற்கு நேரில் சென்று பயோ மெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால், அவருக்குக் கடவுச் சீட்டு கிடைப்பதில் சிக்கல் எழுந்தது.

மனிதாபிமான அடிப்படையில் அவருக்குக் கடவுச் சீட்டு வழங்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயககக் கட்சி கோரிக்கை வைத்தது.

ஆனால்,”பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைக் கிலானி கூறி வருகிறார். அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்குக் கடவுச் சீட்டு தரக் கூடாது” எனப் பாரதீய ஜனதா கட்சி எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இதையடுத்து, “முறைப்படி விண்ணப்பத்தை நிரப்புவதோடு உரிய நடைமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே கிலானிக்குக் கடவுச் சீட்டு வழங்கப்படும் “என்று மத்திய உள் துறை அமைச்சகம் அறிவித்தது.

இந்நிலையில் நேற்று ஸ்ரீநகர் கடவுச் சீட்டு அலுவலகத்திற்குச் சென்ற கிலானி, கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் “இந்தியன்’ என எழுதிக் கையெழுத்திட்டார். அதோடு சும்மா இருக்கவில்லை கிலானி. அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம், “”நான் பிறப்பால் இந்தியன் இல்லை;கட்டாயத்தின் பேரிலேயே இந்தியன் எனக் குறிப்பிட்டேன்” எனக் கூறிவிட்டு, இடத்தைவிட்டு நகர்ந்தார்.

தேவைக்கு மட்டுமே இந்தியா; மற்றதற்கெல்லாம் பாகிஸ்தானா? இது தன் தாயைத் தூற்றிவிட்டு மாற்றான் தாயைப் போற்றுவதற்குச் சமம். கினானி திருந்துவாரா?