Home கலை உலகம் சுரேஷ் கோபிக்குத் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் பதவி.

சுரேஷ் கோபிக்குத் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் பதவி.

597
0
SHARE
Ad

sureshகேரளா, ஜூன் 6- மலையாளத்தில் பிரபல ‘ஆக்‌ஷன் கிங்’ ஆக இருப்பவர் சுரேஷ் கோபி. இவர் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவாளர் ஆவார்.

சுரேஷ் கோபி ஆக்‌ஷன் நடிகர் என்பதால், கேரளாவில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால், இவர் மூலமாகக் கேரளாவில் தன் கட்சியைப் பலப்படுத்தவும் ஓட்டு வங்கியை  அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது பாஜக.

இதற்காகத்  தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் பதவியை அவருக்குக் கொடுக்க முடிவெடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

இதுகுறித்து, சுரேஷ் கோபியிடம் கேட்டால் அவர் வாய் திறந்து எந்தப் பதிலும் சொல்ல மறுக்கிறார்.

அவரின் ரசிகர்களோ,”தலைவர் சினிமாவில் மட்டும் கழுத்து நரம்பு புடைக்கும் அளவுக்கு வசனம் பேசுகிறார். இதைப் பற்றிக் கேட்டால் மூச்சு கூட விட மாட்டேனென்கிறாரே…”என்று முணுமுணுக்கிறார்கள்.

சுரேஷ் கோபி அவர்களே! உங்கள் மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று எடுத்துக் கொள்ளலாமா?