Home நாடு பெர்லிஸ் சவக்குழிகள்: மேலும் 30 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

பெர்லிஸ் சவக்குழிகள்: மேலும் 30 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

637
0
SHARE
Ad

பாடாங் பெசார், ஜூன் 7 – பெர்லிசில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட சவக்குழிகளில் இருந்து மேலும் 91 எலும்புக்கூடுகள் தற்போது கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஜூன் 8ஆம் தேதி முடிவடையும் காலக்கெடுவுக்குள் பாடாங் பெசாரில் கண்டுபிடிக்கப்பட்ட 91 சவக்குழிகளில் இருந்து மனித எலும்புக்கூடுகளை மீட்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Perlis-Rohinya-Bodies exhumed

மலேசியாவுக்குள் தாய்லாந்து எல்லை வழியாக நுழைந்த மியான்மர் நாட்டவர்கள் மனிதக் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டு, தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு, சித்ரவதைக்குப் பின் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் பெர்லிஸ் மாநிலத்தின் பாடாங் பெசார் உள்ளிட்ட பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

“ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தாலும் எங்களது பணியை விடாது தொடர இருக்கிறோம். எனினும் வானிலை எங்களுக்குக் கருணை காட்டும் என நம்புகிறோம்,” என்று பெர்லிஸ் மாநிலத்தின் தலைமை மூத்த உதவி ஆணையர் ஷஃபி இஸ்மாயில் தெரிவித்தார்.

இதுவரை 72 சவக்குழிகள் தோண்டப்பட்டு அவற்றிலிருந்து 64 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாகப் புக்கிட் வாங் பர்மா மற்றும் வாங் கெலியான் பகுதிகளில் இருந்து 35 எலும்புக்கூடுகள் ஏற்கெனவே மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.