கோலாலம்பூர், ஜூன் 7 – இன்று கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் புத்ரா உள்ளரங்கில் கோலாகலமாக நடைபெறும் ஐஃபா (IIFA) எனப்படும் இந்திய அனைத்துலக திரைப்பட விருதுகள் விழாவில் பங்கு பெறுவதற்காக பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் கோலாலம்பூரில் குவிந்துள்ளனர்.
இந்திப் படங்களுக்கான இந்த விருதுகள் வழங்கும் விழா 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோலாலம்பூரில் நடைபெறுகின்றது.
இந்த விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சர் நஸ்ரி அசிஸ் கலந்து கொண்டுள்ளார். மேலும் தெலுங்குப் பட நட்சத்திரம் வெங்கடேஷ், இந்தி நடிகர்கள் ஜேக்கி ஷரோப், ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த திரைப்பட விழாவிற்கு வருகை தந்துள்ள நட்சத்திரங்களில் சிலர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படங்களில் சிலவற்றை இங்கே காணலாம்:-
இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிய பின்னரும் இந்தித் திரையுலகில் கவர்ச்சியில் கலக்கி வரும் மலாய்க்கா அரோரா. இவரது கணவர் அர்பாஸ் கான், பிரபல நடிகர் சல்மான் கானின் சகோதரர் ஆவார்.
இந்தித் திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் குல்ஷன் குரோவர்…
பாலிவுட் நட்சத்திரம் கனிகா கபூர்…
மற்றொரு பிரபல பாலிவுட் கவர்ச்சி நட்சத்திரம் டியா மிர்சா…
படங்கள்: EPA