Home உலகம் தேர்தல் தோல்விப் பயம்: குறுக்கு வழியை நாடும் ராஜபக்சே!

தேர்தல் தோல்விப் பயம்: குறுக்கு வழியை நாடும் ராஜபக்சே!

449
0
SHARE
Ad
rajapaksaஇலங்கை -ஜூன்6- கடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வியடைந்து முடங்கிக் கிடப்பது நாமறிந்ததே!
இந்நிலையில், இலங்கையில் அடுத்த சில மாதங்களில்  பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் போட்டியிட்டால் தோல்வியடைய நேரிடுமோ என்ற பயத்தில், தேசியப் பட்டியல் வழியாக நாடாளுமன்றத்திற்குள் நுழைய அவர் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.ஏற்கனவே ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தன் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட்டால், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வெளியிட்டுத் தன்னைத் தோல்வியடையச் செய்துவிடுவார்கள் என ராஜபக்சே மிரண்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.

மேலும் தனது ஆதரவாளர்களுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பிலோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி சார்பிலோ தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்பதால் ராஜபக்சே மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளாராம்.

இதனால் தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சி சார்பில் தேர்தலில் களமிறங்கலாமா என்றும் அவர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.